வியாழன், 26 மே, 2022

இலங்கைக்கு சத்தமில்லாமல் வந்த கோதுமையின் கதை!

சில பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் ஒருவகையான மா(வு) கூப்பன் கடைகள் மூலம் மக்களிடம் அறிமுகம் செய்யப்படுகிறது.
அப்போது அதன் விலை ரூபா.இலவசம். 

அதனை இலவசமாக விநியோகம் செய்தோர் அதன் பெயரை அமெரிக்கன் மா என
சொல்லி விடுகிறார்கள்.
இன்னும் சிலர் கோதுமை என்றார்கள். 

எது எப்படியோ அந்த வெள்ளைக்காரனின் மாவு பார்ப்பதற்கு அவர்களைப் போல் வெள்ளையாக இருந்தாலும் மக்களிடையே உடனடியாக வரவேற்பு பெறத் தவறிவிடுகிறது. 

அரிசி மாவு மட்டுமே திடகாத்திரமான எம்மவர் வீட்டு அடுப்படிகளை அலங்கரித்த காலம் அது.
இருப்பினும் இலவசம் என்றால் எம்மவர்கள் சும்மா விடுவார்களா?
கூப்பன் அட்டைக்கு கிடைத்த அந்த இலவச மாவை வீட்டுக்கு வெளியில் ஓரிடத்தில் சேமித்து வைத்தார்கள். 

ஊரில் கிழடு கட்டைகள் எவராவது தவறிவிட்டால் உடனே நினைவுக்கு வருவது அந்த அமெரிக்கன் (கழிவு) கோதுமை 
மாவு தான்.
பசை குழைத்து பாடையில் அலங்காரங்களை ஒட்டுவதற்காக அந்த மாவுக்குள் சுடுநீர் ஊற்றப்படும். 

அந்த மாவை வைத்து உலகத்தை வளைத்து ஒட்டுவதற்கு உற்பத்தியாளன் படாதபாடுபட 
எம்மவர்கள் அதற்கு பாடை ஒட்டும் மா என பெயரிட்டு ஒதுக்கி வைத்து அவர்களை அவமானப்படுத்தியிருந்தார்கள். 

காலம் சில சதிவலைகளைக் கடந்து நகர்கிறது பின்நாட்களில். 

இன்று அந்த பாடை ஒட்டும் மாவின் விலை இலங்கையில் உச்சத்தை தொட்டுநிற்கிறது என்றால் இடையில் அந்த மாவின் மவுசை அதிகரிக்க அந்த காப்ரேட் வெள்ளையன் என்ன பாடுபட்டிருக்கவேண்டும்? 

இப்போது அந்த பாடை ஒட்டும் மாவு ஒரு அரசாங்கத்தையே மாற்றும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து ஆழமாக வேரூன்றி விட்டது. 

அந்த சதிவலையிலிருந்து வெளியேறி உள்ளூர் உற்பத்திகளுடன் மீண்டும் பயணிக்க இன்றைய  இலங்கையின் பொருளாதாரம் அரிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். 

பாடை ஒட்டும் மாவினை பாடையில் ஏற்றி ஆரோக்கியமான வாழ்வினைத்தரும் உள்ளூர் உற்பத்தி உணவுப் பொருட்களுடன் இனிமேல் இணைந்து பயணிப்போம் என்று கூறுவதுதான் இப்பத்தியின் நிறைவுக்குப் பொருத்தமாக இருக்கும். 

நன்றி

ஒரே ஆண்டில் 60% மழைக்காடுகள் அழிப்பு!!!!

காடுகள் தான் பல உயிரினங்களுக்கு தாயகமாக விளங்குகிறது அந்த காடுகள் தான் நமக்கு ஒட்சிசன் தருகிறது. அப்பேர்பட்ட காடுகளை நாம் பாதுகாக்கிறோமா என்றால் அது கேள்விக்குறிதான்?

காடுகளின் நன்மைகளை புரிந்துகொள்ளாமல் உலகமெங்கிலும் பணத்துக்காக காடழிப்பு நடைபெற்று வருகிறது.
அரசாங்கம் இதற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்தாலும் மரங்களை கடத்தும் மாபியாக்களினால் தற்போதும் இது நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் விஞ்ஞானிகள் செய்த ஆய்வில்
பிரேசிலில் உள்ள அட்லாண்டிக் மழைக்காடுகள் ஒரே ஆண்டில் 66% அளிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர்.
இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்கண்ட பிரேசிலில் அரசாங்கம் செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செவ்வாய், 24 மே, 2022

நீங்கள் ஒரு கோபக்காரா அப்போ கண்டிப்பா இதை படிங்க.

மிகப்பெரிய கோபக்காரங்களை பார்த்துருக்கீங்களா?
அவங்களை நல்லா கவனிச்சு பாருங்களேன். 

காட்டுக்கத்தலா கத்துவாங்க,
எடுத்தெறிஞ்சு பேசுவாங்க,
என்ன பேசறோம்னு கூட தெரியாத அளவுக்கு வார்த்தைகளை விடுவாங்க,
அழுவாங்க.
சீக்கிரம் உடைஞ்சு போவாங்க,
தனியா பேசுவாங்க,
அவசரப்படுவாங்க. 

தன் பக்கத்து நியாயத்தை எப்படி வெளிப்படுத்தனும்னு தெரியாம,
தான் பேச வந்ததை கோபத்தால் மாத்தி கெட்ட பேரு வாங்கிட்டு போவாங்க.
ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க.
முக்கியமா நடிக்க மாட்டாங்க.
ரோட்ல வண்டியில் போகும்போது யாராவது பின்னாடி இருந்து வேகமா ஹாரன் அடிச்சா கையசைச்சு போகவிடுவாங்க.
லைன்ல நிக்கும் போது யாராவது பின்னாடி இருந்து அவசரபடுத்தினா வழிவிடுவாங்க. 

யாராவது எங்கேயோ கஷ்டபட்டா யாராவது எங்கேயோ வலிச்சா
டிவியில சீரியல்ல யாராவது வேதனைப்பட்டா இங்கே இவங்களுக்கு வலிக்கும்.
துடிச்சு போவாங்க..
பாவம் இல்ல னு தனக்குள்ளே பேசி முனறுவாங்க.
வளர்ந்த குழந்தை போல இருப்பாங்க. 

ரொம்ப அமைதியா இருப்பாங்க,
அதிகமா தனிமையை நாடுவாங்க,
எல்லோரையும் நேசிப்பாங்க.
தனக்குன்னு இருக்கிற உயிரை 'தனக்கு மட்டும் தான்' னு நினைச்சு உருகிடுவாங்க. 

எத்தனையோ நெகட்டீவ் அவங்க மேலே இருந்தாலும் ஒரேயொரு விஷயம் அவங்களை முன்னிருப்பு செய்யும்.
அது 
அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யமாட்டாங்க எப்போதும்.
முதுகில குத்தவே மாட்டாங்க உயிரே போனாலும்...

திங்கள், 23 மே, 2022

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தொழிற்சாலை

தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை தாங்கி நிற்கும் இடம் கீழடி என்று நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு தற்போது வரை பலதரப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பண்டைய கீழடியில் இரும்பு உருக்குத் தொழிற்சாலை இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட புதிய தகவலின்படி கீழடியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பை உருக்கும் ஆலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 எட்டாம் கட்ட அகழாய்வில் இரும்பு துண்டுகள் , இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் கண்டறியப்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவில் வளர்ந்துகொண்டே செல்லும் பள்ளம்!

ரஷ்யாவின் சைபீரியாவில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் மேலும் வளர்ந்துகொண்டே இருப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர் இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புவி வெப்பமடைவதால் சைபீரிய பகுதியில் உள்ள உறைபனி நிலங்கள் உருகத் தொடங்கியதன் விளைவாக இதுபோன்ற பள்ளம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 நரகத்தின் வாசல்கள் எனப்படும் இத்தகைய பள்ளங்கள் முடிவற்றவை  இதை போன்ற பள்ளங்கள் மேலும் தோன்றக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஞாயிறு, 22 மே, 2022

OTT தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உச்சத்தில்!

சமீபகாலமாக OTT பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் தியேட்டரில் சென்று திரைப்படங்கள் பார்த்தவர்கள் இப்போது வீட்டிலேயே புதிய திரைப்படங்களை கண்டு ரசிக்க OTT தளங்கள் வழிவகை செய்துள்ளது.

பயனர்கள் இதை பயன்படுத்துவதற்கு பல காரணங்களை கூறுகின்றனர்.

•தியேட்டரில் செலுத்தும் பணத்தைவிட OTT தளங்களில் திரைப்படம் பார்ப்பதற்கு குறைவாகவே கட்டணம் பெறப்படுகிறது.
•வீட்டிலிருந்தபடியே ஹாலிவுட் பாலிவுட் என்று உலகிலுள்ள அனைத்து திரைப்படங்களையும் இந்த ஓட்டிட்டு தளம் மூலம் கண்டு
 கழிக்கலாம்.
இப்படி பலதரப்பட்ட காரணங்கள் பயணிகளை சொல்லப்படுகிறது.

சமீபத்தில் BAIN company நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த  3 ஆண்டை ஒப்பிடும் போது தற்போது ஓட்டிட்டு தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% ஆக உயர்ந்துள்ளது.

இதே வேகத்தில் சென்றால் 2026 ஆம் ஆண்டில் பயனர்களின் எண்ணிக்கை 22.4 எட்டும் என்று அந் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இந்த வாரம் இரத்த மழை! இரத்த மழை என்றால் என்ன?

இங்கிலாந்தில் “ ரத்த மழை ” பெய்யுமா ?
 இங்கிலாந்தின் சில பகுதிகளில் இந்த வாரம் “ ரத்த மழை ” பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தகவல் ! 
ரத்த மழை என்பது அதிக அளவில் சிவப்பு நிற தூசு , மழை நீருடன் கலந்து பெய்வது என தகவல் !

சனி, 21 மே, 2022

அவுஸ்திரேலியா சென்ற இலங்கை தமிழர்கள் திக்கற்ற நிலையில்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையின் படகு ஒன்று ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இடைமறிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய எல்லைப் படை, 'ஆஸ்திரேலிய அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வரும் எந்த படகையும் நாங்கள் இடைமறித்து படகில் வந்தவர்கள் வந்த இடத்திற்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BA.4 ஒமிக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள்.

 ஓமிக்ரான் BA.4 நோயாளிகளுக்கு சளி பாதிப்பு தான் பொதுவான அறிகுறி

 மூக்கு அடைத்தல் , இருமல் , உடல் வலிகள் மற்றும் சோர்வு முக்கிய அறிகுறிகளாக உள்ளன

 பலருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 சுவை மற்றும் வாசனை இழப்புகள் குறைவாகவே ஏற்படும்

வெள்ளி, 20 மே, 2022

பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பர்தா கட்டாயம் !

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அனைத்து பெண் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் இனி முகத்தை மூடிக்கொண்டுதான் நேரலையில் வர வேண்டும் - தலிபான் தலைமையிலான அரசு உத்தரவு.

வியாழன், 19 மே, 2022

ரஷ்யாவில் கைதி!!!!

ரஷ்யாவில் கைதி திரைப்படம் இன்று ரிலீஸ்.
 ரஷ்யாவின் 121 நகரங்களில் கைதி திரைப்படம் இன்று ரிலீஸ் , கடந்த ஆண்டு ஜப்பானிய மொழியில் வெளியான நிலையில் , இந்தாண்டு ரஷ்யாவில் வெள்ளித்திரை காண்கிறது.

புதன், 18 மே, 2022

இலங்கையின் வடிவை ஒத்த குட்டி தீவு.


 விபீஷணன் கோவில், தனுஷ்கோடி ராமேஸ்வரம், தமிழ்நாடு. 

தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோயில் பகவான் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயமாகும்.  ராமேஸ்வரத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியை புரட்டிப் போட்ட சூறாவளியில் இருந்து தப்பிய ஒரே ஒரு வரலாற்றுக் கட்டிடம் இந்தக் கோயில்தான்.  இக்கோயிலில் ராமர், லக்ஷ்மணன், சீதை, அனுமன், விபீஷணன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.  கடலால் சூழப்பட்ட இந்த கோவில் சுற்றுலா தலமாக உள்ளது.  ராமேஸ்வரத்தில் இருந்து எளிதில் அணுகலாம்.

பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை

• 1991 மே 21 
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை 

• 1998 ஜனவரி 28
பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு 

• 1999 மே 11 
நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம் 

• 2000 ஏப்ரல் 24 
நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு 

• 2011 ஆகஸ்டு 12
கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார் குடியரசுத் தலைவர் 

• 2011 ஆகஸ்டு 26 
POLIMER NEWS பேரறிவாளன் , சாந்தன் , முருகன் மூவரைத் தூக்கிலிடச் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது 

• 2014 பிப்ரவரி 18 
பேரறிவாளன் , சாந்தன் , முருகன் ஆகியோரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு 

• 2014 பிப்ரவரி 19 
ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் 

• 2018 செப்டம்பர் 6 
சட்டப்பிரிவு 161- கீழ் ஆளுநர் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு 

• 2018 செப்டம்பர் 9 
ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவை தீர்மானம் 

• 2022 மார்ச் 9 
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் 

• 2022 மே 18 
பேரறிவாளனை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம்

கேஜிப் 2 - ரூ .1200 கோடி வசூலை அள்ளியது.

கேஜிப் சேப்டர் 2 படத்தின் வசூல் உலக அளவில் 1200 கோடி ரூபாயை தாண்டியது.
தங்கல் , பாகுபலிக்குப் பின் இந்திய அளவில் மூன்றாவது அதிக வசூல் சாதனை படைத்த படம் என்ற இடத்தைப் KGF 2 பிடித்தது.

செவ்வாய், 17 மே, 2022

நேட்டோவில் இணையும் பின்லாந்து.

 நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து இணைவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
200 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 188 பேர் நேட்டோவில் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தாய்ப்பாலை விற்கும் இளம் தாய் !

தாய்ப்பாலை விற்கும் இளம் தாய் ! தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து , தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்று வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த இளம் தாய் அலிசா ! 
அமெரிக்காவில் பிரபல பால் பவுடர் கம்பெனி மூடப்பட்டதால் அங்கு கடும் தட்டுப்பாடு ஏற்படவே , அதிக தாய்மார்கள் அலிசாவிடம் தாய்ப்பாலை வாங்கி செல்கின்றனர்.

ராஜமௌலி இயக்கத்தில் உலகநாயகன்

இந்தியாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படத்தில் ராம் சரண் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 


இந்நிலையில் ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமௌலி. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 3-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.       

திங்கள், 16 மே, 2022

LONG NIGHT " எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்றுவிட்டது அண்டார்டிகா

" LONG NIGHT " எனப்படும் நீண்ட இரவு காலத்திற்கு சென்றுவிட்டது அண்டார்டிகா ; இன்னும் 4 மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தகவல் !
 இன்னும் நான்கு மாத காலத்திற்கு அந்தாட்டிக்கா ஒரு இருண்ட கண்டமாக காணப்படும்.

ஆழ்கடலுக்கு அடியில் மஞ்சள் நிற சாலையா?

 பசிபிக் பெருங்கடலில் 3,375 அடி ஆழத்தில் மஞ்சள் செங்கல் சாலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . இது உலர்ந்த ஏரி படுகையாக இருக்கலாம் எனத் தகவல் .

15 லட்சம் செயலிகள் நீக்கம் - கூகுள் ஆப்பிள் அதிரடி !

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் இருந்து சுமார் 15 லட்சம் செயலிகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக Pixalate என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

2 வருடங்களுக்கு மேலாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இந்த செயலிகள் செயல்பட்டு வருவதாகவும் , அவை ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை

தசாவதாரம் 2 - கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில் !

தசாவதாரம் 2 - கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில் ! ' தசாவதாரம் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது . சமீபத்தில் கமலுடம் பேசினேன் , அப்போது தசாவதாரம் பாகம் 2 பற்றி கேட்கிறார்கள் என்றதற்கு எத்தனை கோடி கொடுத்தாலும் மீண்டும் தசாவதாரம் போன்ற படத்தை எடுக்க முடியாது என அவர் கூறினார்.
 தசாவதாரம் 2 வருமா என்ற கேள்விக்கு கே.எஸ்.ரவிக்குமார் பதில்

ஞாயிறு, 15 மே, 2022

நிலவில் மண்ணில் வளர்க்கப்பட்ட தாவரம் .

நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மண்ணில் அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குறிப்பிட்ட தாவர இனம் ஒன்றை வளர்த்துள்ளனர்.
 நிலவில் உணவு மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ வழிவகை செய்யும் முயற்சிக்கு இந்த தாவர வளர்ப்பு ஒரு அடித்தளமாக அமைய வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளனர்.

வெள்ளி, 13 மே, 2022

ட்விட்டரை வாங்குவதில் தயக்கம் காட்டும் மஸ்க் !

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
 ட்விட்டர் தளத்தில் இருக்கும் 5 % கணக்குகள் போலியானவை என்பதால் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என தெரிவித்துள்ளார்!!!!!

வியாழன், 12 மே, 2022

சிங்கிள் Potato சிப்ஸ் இவ்வளவு விலையா ?

ஒரு உருளைக் கிழங்கு சிப்ஸ் - ஐ ரூ .1.63 லட்சத்துக்கு eBay என்ற ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர்.
 சிப்ஸின் தோற்றம் தனித்துவமாக இருந்ததால் இந்த விலை நிர்ணயித்ததாக தகவல்.

சூரியனை விட 4 மில்லியன் மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு|

பால்வெளி மண்டலத்தில் ( Milky way) சூரியனை விட 4 மில்லியன் மடங்கு பெரிய அளவிலான Sagittarius A * கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் .
 பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் ராட்சத கருந்துளை உள்ளதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படித்ததில் பிடித்தது.

நீங்கள் Google Map உதவியுடன் செல்லும் போது வழி தவறினால், Google Map உங்களை கண்டிக்கவோ அல்லது திட்டுவதோ கிடையாது  என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? 

ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி  , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை. 

அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும். 

நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை  அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல. 

இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது - தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு. 

அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த  வேண்டும் 

உங்கள் குழந்தைகள், கணவன் . மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள். 

வாழ்க்கை இனிமையாக இருக்கும்...❤ 

#படித்ததில்_பிடித்தது

இலங்கை பிரச்சனையால் சிக்கலில் மாட்டிய லொஸ்லியா!




இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா அங்குள்ள சக்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார். 

தமிழகத்தில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் அவர் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து நடிகர்கள் லாஸ்லியாவுக்கு படையெடுக்கத் தொடங்கினர். 

ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லொஸ்லியா. ஒரு சமீபத்திய நேர்காணலில், இலங்கையின் பொருளாதார பிரச்சினைகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு லொஸ்லியா பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

“இலங்கையில் இப்பொழுது இருக்கும் பொருளாதார பிரச்சனை குறித்து போஸ்ட் தான் போட்டு ஷேர் செய்து என்னால் வருத்தப்படத்தான் முடியுமே தவிர உதவிட முடியாது மற்றும் சாதாரண தினக்கூலிகளை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. விரைவில் இதிலிருந்து மீண்டு வருவோம் என நினைப்பதாக தெரிவித்துள்ளார். 

அவரது பேட்டியால் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் உங்கள் மக்களுக்கு ஒரு சிறு உதவி கூட செய்ய முடியாத நிலையிலா உள்ளீர்கள். யாரும் உங்களிடம் உதவி கேட்கவில்லை என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுக்கின்றனர்.

கூகுளில் சமஸ்கிருதம்!!!!!

கூகுள் Translate - TM சமஸ்கிருதம்.

 சமஸ்கிருதம் , போஜ்பூரி உள்ளிட்ட மேலும் 24 மொழிகளில் Translate மற்றும் Search சேவையை அறிமுகம் செய்துள்ளது.
 30 கோடி மக்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என சுந்தர் பிச்சை அறிவிப்பு !

ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியே அராம்கோ நிறுவனம்

 சவுதி அரேபிய அரசின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான அராம்கோ , ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ளது.

 அராம்கோ ” நிறுவனத்தின் மதிப்பு 2.42 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து உள்ளது.

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல தடை.

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவு

திங்கள், 9 மே, 2022

மகிந்த பதவி விலகியதை கொழும்பு மக்கள் கிரிபத் சமைத்துக் கொண்டிருந்தனர்.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததையடுத்து, கொழும்பு பஞ்சிகாவத்தையில் மக்கள் வீதியில் கிரிபத் (பால் சாதம்) சமைத்துக் கொண்டிருந்தனர். 

நாடு முழுவதும் வன்முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கொழும்பு மக்கள் பால் சோறு பொங்கி மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இலங்கை பிரதமர் ராஜபக்ச ராஜினாமா!!! ராஜினாமா கடிதம் உள்ளே👇

 இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்தார்
ராஜினாமா கடிதம்

ஞாயிறு, 8 மே, 2022

வெவ்வேறு நாடுகளின் வித்தியாசமான எல்லைகள்.......Amazing Borders Of Different Countries 😲

1.NEPAL🇳🇵 & INDIA🇮🇳
2.BELGIUM & NETHERLANDS

3. HUNGARY, AUSTRIA & SLOVENIA
4. GUATEMALA & MEXICO
5. MEXICO & EUA 
6.CANADA & USA 
7. MYANMAR ,LAOS & THAILAND
8. ARGENTINA , PARAGUAI & BRASIL
9.ZIMBABWE & ZAMBIA

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
*இன்னும் கல்யாணம் ஆகலயா?*
*குழந்தைகள் இல்லையா?*
*இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?*
*ஏன் இன்னும் Car வாங்கவில்லை?*
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. *இம்முறை இயலாவிட்டால் மறுமுறை* நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. *மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள்*. மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. *அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள்*. அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. *நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள்*. அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி *நன்றி சொல்லுங்கள்*.

11. பொதுவில் புகழுங்கள். *தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்*.

12. *உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.*
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. *யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள்*. அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. *யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள்*. அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. *நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்*.

16. *கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்*.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் *சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள்*. அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், *Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள்*. கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக *வலிய போய் தலையிடாதீர்கள்.*

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் பகிருங்கள் *மற்றவர்களுக்கும்*  பயன்தரும். நன்றி 🙏

சனி, 7 மே, 2022

எது? உலக அதிசயம்.

தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒருகட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். 

தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா? அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. 

சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழுஇசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட, இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. 

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்வளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று
பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். 

வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். 

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். 

யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம் கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம். 

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. 

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது. அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் சந்திரகாந்தக்கற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர். 

மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.
முன்னோா்களின் திறமையையும் & கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம்!
இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்!!எது? உலக அதிசயம்.
தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒருகட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். 

தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம்தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா? அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. 

சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். 

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழுஇசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட, இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. 

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்வளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று
பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும்.
வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம்.
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது. 

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம்,
அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் என அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். 

யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம் கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம். 

இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.
மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. 

அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது. அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் சந்திரகாந்தக்கற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர்.
மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம். தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம். 

முன்னோா்களின் திறமையையும் & கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம்! 

இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்!! 

வெள்ளி, 6 மே, 2022

இன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமல்

 இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்- ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே உத்தரவு . இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவசரநிலை பிரகடனம் அமல் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய , பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா கோரி பொதுமக்கள் கிளர்ச்சி

வியாழன், 5 மே, 2022

WhatsAppல் இனி REACT செய்யலாம்

 இன்று முதல் வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ்களுக்கு ‘ REACT ' செய்யலாம் பல மாத சோதனைக்கு பிறகு இன்று WHATSAPP பயனாளர் அனைவருக்கும் " REACT " செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக MARK ZUCKERBERG அறிவிப்பு .

வேற்றுகிரகவாசிகளை ஈர்க்க மனிதர்களின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப உள்ளது நாசா.

ஏலியன்ஸ்களை ஈர்க்க நாசாவின் புதிய திட்டம் ! 

வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்று பல ஆராய்ச்சி பல வருடமாக நடந்து வருகிறது அதில் எந்தவிதமான தீர்க்கமான முடிவு எட்டப்படாததால்.

 நாசா தற்போது புதிய முயற்சி ஒன்றை கையாள உள்ளது அந்த வகையில்
வேற்று கிரக மனிதர்களை ஈர்க்க மனிதர்களின் நிர்வாண புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது .
இதற்கு பல எதிர்மறையான கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

புதன், 4 மே, 2022

துணை நடிகர்களாக இருந்த இன்றைய பிரபலங்கள்.

தமிழ் திரையுலகில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தங்களது கடும் முயற்சியால் பெரும் நட்சத்திரமாக வளர்கள் அதிகம்.
அந்த வகையில் சிறிய ரோலில் நடிக்க தொடங்கி தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களாக மாறியவர்களின் பழைய புகைப்படங்களை கீழே காணலாம்.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...