அப்போது அதன் விலை ரூபா.இலவசம்.
அதனை இலவசமாக விநியோகம் செய்தோர் அதன் பெயரை அமெரிக்கன் மா என
சொல்லி விடுகிறார்கள்.
இன்னும் சிலர் கோதுமை என்றார்கள்.
எது எப்படியோ அந்த வெள்ளைக்காரனின் மாவு பார்ப்பதற்கு அவர்களைப் போல் வெள்ளையாக இருந்தாலும் மக்களிடையே உடனடியாக வரவேற்பு பெறத் தவறிவிடுகிறது.
அரிசி மாவு மட்டுமே திடகாத்திரமான எம்மவர் வீட்டு அடுப்படிகளை அலங்கரித்த காலம் அது.
இருப்பினும் இலவசம் என்றால் எம்மவர்கள் சும்மா விடுவார்களா?
கூப்பன் அட்டைக்கு கிடைத்த அந்த இலவச மாவை வீட்டுக்கு வெளியில் ஓரிடத்தில் சேமித்து வைத்தார்கள்.
ஊரில் கிழடு கட்டைகள் எவராவது தவறிவிட்டால் உடனே நினைவுக்கு வருவது அந்த அமெரிக்கன் (கழிவு) கோதுமை
மாவு தான்.
பசை குழைத்து பாடையில் அலங்காரங்களை ஒட்டுவதற்காக அந்த மாவுக்குள் சுடுநீர் ஊற்றப்படும்.
அந்த மாவை வைத்து உலகத்தை வளைத்து ஒட்டுவதற்கு உற்பத்தியாளன் படாதபாடுபட
எம்மவர்கள் அதற்கு பாடை ஒட்டும் மா என பெயரிட்டு ஒதுக்கி வைத்து அவர்களை அவமானப்படுத்தியிருந்தார்கள்.
காலம் சில சதிவலைகளைக் கடந்து நகர்கிறது பின்நாட்களில்.
இன்று அந்த பாடை ஒட்டும் மாவின் விலை இலங்கையில் உச்சத்தை தொட்டுநிற்கிறது என்றால் இடையில் அந்த மாவின் மவுசை அதிகரிக்க அந்த காப்ரேட் வெள்ளையன் என்ன பாடுபட்டிருக்கவேண்டும்?
இப்போது அந்த பாடை ஒட்டும் மாவு ஒரு அரசாங்கத்தையே மாற்றும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்து ஆழமாக வேரூன்றி விட்டது.
அந்த சதிவலையிலிருந்து வெளியேறி உள்ளூர் உற்பத்திகளுடன் மீண்டும் பயணிக்க இன்றைய இலங்கையின் பொருளாதாரம் அரிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பாடை ஒட்டும் மாவினை பாடையில் ஏற்றி ஆரோக்கியமான வாழ்வினைத்தரும் உள்ளூர் உற்பத்தி உணவுப் பொருட்களுடன் இனிமேல் இணைந்து பயணிப்போம் என்று கூறுவதுதான் இப்பத்தியின் நிறைவுக்குப் பொருத்தமாக இருக்கும்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக