திருகோணமலை துறைமுகத்தின் அமைவிடத்தினை அவதானிக்கும்போது வட அகலாங்கு 8 பாகைக்கும் கிழக்கு நெட்டாங்கு 81 பாகைக்கும் இடையில் காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 5261 ஹெக்டேயர்ஸ் ஆகும். இந்த துறைமுகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. அவை உட் துறைமுகம், மற்றும் வெளித்துறைமுகம் ஆகும். உட்துறைமுகம் பாறைகள் மற்றும் நிலங்கள் சூழ்ந்ததோடு மட்டுமில்லாமல் இயற்கையாக ஆழம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நீர்முழ்கி கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை இங்கு பாதுகாப்பாக தரித்து நிற்க முடியும்.
திருகோணமலை துறைமுகத்தின் நுழைவாயில் 500 மீட்டர் அகலத்தினை கொண்டிருக்கும். இது வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருக்கும். இது மே தினம் அன்று மாத்திரம் பூட்டப்பட்டிருக்கும். திருகோணமலை துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் நுழைவு பிரதேசமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை துறைமுகம் வர்த்தகம், வணிகம், உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகள், சுற்றுலா சார்ந்த விடயங்களுக்கு ஏற்ற இடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது 1956ம் ஆண்டு வர்த்தக நோக்குடைய துறைமுகமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த திருகோணமலை துறைமுகம் இலங்கை துறைமுக சேவை திணைக்களத்திற்கு கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது உலகின் முதலாவது ஆழ்கடல் சார்ந்த துறைமுகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு நீர் சார்ந்த பகுதியின் அளவு 1630 ஹெக்டேயர்ஸ் ஆக காணப்படுகின்றது. இது உலகின் இரண்டாவது பெரிய இயற்கை துறைமுகமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை துறைமுகம் இலங்கையின் வரலாற்றிலே முக்கிய தளமாக காணப்படுகின்றது. பல்வேறு கடல் சார் யுத்தங்களை நாடர்த்துவதற்கும் கண்காணிப்புக்கும் முக்கிய இடமாக இன்று வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக