Trincomalee natural harbour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Trincomalee natural harbour லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2022

திருகோணமலை இயற்கை துறைமுகம் பற்றிய சில தகவல்கள்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் இந்திய பெருங்கடலின் மையத்தில் திருகோண மலையில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான இயற்கை துறைமுகம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற ஒரு  சர்வதேச வர்த்தகம் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையமாக காணப்படுகின்றது. ஐரோப்பிய குடியேற்ற காலத்தில் இத்துறைமுகத்தினை கைப்பற்ற பல யுத்தங்கள் நடைபெற்றன. ஆரம்ப காலத்தில் போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்றோர் இத்துறைமுகத்தினை கைப்பற்றி ஆட்சியினை மேற்கொண்டனர். 

திருகோணமலை துறைமுகத்தின் அமைவிடத்தினை அவதானிக்கும்போது வட அகலாங்கு 8 பாகைக்கும் கிழக்கு நெட்டாங்கு 81 பாகைக்கும் இடையில் காணப்படுகின்றது. இதன் பரப்பளவு 5261 ஹெக்டேயர்ஸ்  ஆகும். இந்த துறைமுகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. அவை உட் துறைமுகம், மற்றும் வெளித்துறைமுகம் ஆகும். உட்துறைமுகம் பாறைகள் மற்றும் நிலங்கள் சூழ்ந்ததோடு மட்டுமில்லாமல் இயற்கையாக ஆழம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நீர்முழ்கி கப்பல்கள் முதல் சாதாரண கப்பல்கள் வரை  இங்கு பாதுகாப்பாக தரித்து நிற்க முடியும். 

திருகோணமலை துறைமுகத்தின் நுழைவாயில் 500 மீட்டர் அகலத்தினை கொண்டிருக்கும். இது வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டிருக்கும். இது மே தினம் அன்று மாத்திரம் பூட்டப்பட்டிருக்கும். திருகோணமலை துறைமுகம் கிழக்கு மாகாணத்தின் நுழைவு பிரதேசமாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை துறைமுகம் வர்த்தகம்,  வணிகம், உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செயற்பாடுகள், சுற்றுலா சார்ந்த விடயங்களுக்கு ஏற்ற இடமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது 1956ம் ஆண்டு வர்த்தக நோக்குடைய  துறைமுகமாக மாற்றியமைக்கப்பட்டது. தற்பொழுது இந்த திருகோணமலை துறைமுகம் இலங்கை துறைமுக சேவை திணைக்களத்திற்கு கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இது உலகின் முதலாவது ஆழ்கடல் சார்ந்த துறைமுகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு நீர் சார்ந்த பகுதியின் அளவு 1630 ஹெக்டேயர்ஸ் ஆக காணப்படுகின்றது. இது உலகின் இரண்டாவது பெரிய இயற்கை துறைமுகமாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை துறைமுகம் இலங்கையின் வரலாற்றிலே முக்கிய தளமாக காணப்படுகின்றது. பல்வேறு கடல் சார் யுத்தங்களை நாடர்த்துவதற்கும் கண்காணிப்புக்கும் முக்கிய இடமாக இன்று வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...