அவங்களை நல்லா கவனிச்சு பாருங்களேன்.
காட்டுக்கத்தலா கத்துவாங்க,
எடுத்தெறிஞ்சு பேசுவாங்க,
என்ன பேசறோம்னு கூட தெரியாத அளவுக்கு வார்த்தைகளை விடுவாங்க,
அழுவாங்க.
சீக்கிரம் உடைஞ்சு போவாங்க,
தனியா பேசுவாங்க,
அவசரப்படுவாங்க.
தன் பக்கத்து நியாயத்தை எப்படி வெளிப்படுத்தனும்னு தெரியாம,
தான் பேச வந்ததை கோபத்தால் மாத்தி கெட்ட பேரு வாங்கிட்டு போவாங்க.
ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க.
முக்கியமா நடிக்க மாட்டாங்க.
ரோட்ல வண்டியில் போகும்போது யாராவது பின்னாடி இருந்து வேகமா ஹாரன் அடிச்சா கையசைச்சு போகவிடுவாங்க.
லைன்ல நிக்கும் போது யாராவது பின்னாடி இருந்து அவசரபடுத்தினா வழிவிடுவாங்க.
யாராவது எங்கேயோ கஷ்டபட்டா யாராவது எங்கேயோ வலிச்சா
டிவியில சீரியல்ல யாராவது வேதனைப்பட்டா இங்கே இவங்களுக்கு வலிக்கும்.
துடிச்சு போவாங்க..
பாவம் இல்ல னு தனக்குள்ளே பேசி முனறுவாங்க.
வளர்ந்த குழந்தை போல இருப்பாங்க.
ரொம்ப அமைதியா இருப்பாங்க,
அதிகமா தனிமையை நாடுவாங்க,
எல்லோரையும் நேசிப்பாங்க.
தனக்குன்னு இருக்கிற உயிரை 'தனக்கு மட்டும் தான்' னு நினைச்சு உருகிடுவாங்க.
எத்தனையோ நெகட்டீவ் அவங்க மேலே இருந்தாலும் ஒரேயொரு விஷயம் அவங்களை முன்னிருப்பு செய்யும்.
அது
அடுத்தவர்களுக்கு துரோகம் செய்யமாட்டாங்க எப்போதும்.
முதுகில குத்தவே மாட்டாங்க உயிரே போனாலும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக