ஒருபோதும் அது உங்களுக்கு எதிராக குரல் உயர்த்தி , “நீங்கள் இடதுபுறம் திரும்பி இருக்க வேண்டும், முட்டாள்! இப்போது நீங்கள் மிக நீளமான பாதையில் செல்ல வேண்டியிருக்கும், இது உங்களுக்கு அதிக நேரத்தையும் எரிவாயையும் செலவழிக்க வைக்க போகிறது, மேலும் நீங்கள் சந்திப்பிற்கு தாமதமாக போவீர்கள்’ என்று கத்துவதில்லை.
அப்படிச் செய்திருந்தால், நீங்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருப்பீர்கள், மாறாக, அது மீண்டும் வழியமைத்து, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள அடுத்த சிறந்த வழியைக் காண்பிக்கும்.
நீங்கள் செல்ல விரும்பும் இடத்தை அடையச் செய்வதே அதன் முதன்மையான நோக்கமே தவிர, தவறு செய்ததற்காக உங்களை வருத்தப்பட வைப்பது அல்ல.
இதில் ஒரு சிறந்த பாடம் உள்ளது - தவறு செய்தவர்கள் மீது, குறிப்பாக நமக்கு நெருக்கமாக இருப்பவர்கள் மீது எப்போதும் நமது விரக்தியையும் கோபத்தையும் இறக்கி வைப்பது உண்டு.
அதனால் என்ன பயன் , ஒரு பிரச்னையை எதிர்கொண்டால் அதை சரி செய்ய முனைய வேண்டுமே தவிர பிறரை பழி சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும்
உங்கள் குழந்தைகள், கணவன் . மனைவி, சக பணியாளர்கள் மற்றும் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு நீங்கள் ஒரு Google Map ஆக இருங்கள்.
வாழ்க்கை இனிமையாக இருக்கும்...❤
#படித்ததில்_பிடித்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக