நீங்கள் இலங்கையர் எனில் Passport apply /renew செய்ய என்ன வேண்டும்?
1. NIC original and copy.
2. பழைய passport இருப்பின் original and copy.
2. Birth certificate original. (6 மாத காலத்திற்குள் CERTIFY செய்யப்பட்டது)
3. PHOTO studio acknowledgment recipet ( Photo Studio ஒன்றில் சொன்னால் அவர்கள் படம் எடுத்து அவர்களே passport office க்கு computer system வழியே அனுப்புவார்கள். உங்களுக்கு printed recipet ஒன்றை தருவார்கள்)
•Most needed•
4. Online வழியே எடுத்த appointment.
(அதில் தான் சிக்கல்)
* கட்டணம் எவ்வளவு?
One day service -15000
Normal service - 3500
(You need cash only when u go on the appointment date. No card payments allowed)
* என்ன சிக்கல்?
1. Online வழியே மட்டுமே appointment தருவார்கள். அதுவும் அடுத்த 30 நாட்களுக்கு முழுதும் full ஆகிவிட்டது.
2. Phone இல் தொடர்பு கொள்ள தரப்பட்டுள்ள contact நம்பர்கள் எதுவுமே வேலை செய்யவில்லை. So don't waste ur time.
3. நேரில் சென்றால் ஒரே நாளில் வேலை நடக்காது. லைனில் நின்று appointment எடுக்க முடியும். முதல் 400 பேருக்கு மாத்திரம், அதுவும் 2 வாரத்திற்கு பின்னர் வருகிற ஒரு தேதியாய் பார்த்து தருவார்கள்.
4. ஒவ்வொரு நாள் இரவும் அடுத்த நாளைக்கு லைனில் நிக்க ஒரு கூட்டம் அங்கேயே நிற்கிறது. 500 பேருக்கு மேல் நிற்பதாக சொன்னார்கள். காலையில் விடியும் வேளையில் செல்வது சில நேரம் luck இன் உபயம்.
5. Birth certificate 6 மாத காலத்திற்குள் CERTIFY செய்யப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்.
6. கொழும்பில் இருக்கும் எந்த ஒரு AG office இலும் -நாட்டில் நீங்கள் பிறந்த இடம் எதுவாக இருந்தாலும்- Copy certified பண்ணி தருவார்கள். பிறந்த ஊருக்கு போக வேண்டியதில்லை. But, you should have born after 1974. So, சிலருக்கு பிறந்த மாவட்டம் தான் போக வேண்டி வரும்..
7. சிலருக்கு உங்கள் birth certificate பதிவுகள் system இல் காட்டவில்லை என்றால்., நீங்கள் பிறந்த மாவட்டம் தான் கதி. Happened to a few today...
8. Photo acknowledgement recipet எடுக்க ஸ்டுடியோ போனால் .. சில ஸ்டுடியோவில் system down. பல இடங்களில் கடந்த சில நாட்களாக வேலை செய்ய வில்லையாம்.
9. பத்தரமுல்ல, passport office அருகில் உள்ள photo studio க்களில் system நன்றாக வேலை செய்கிறது. ரூ.750 - ரூ.1000 ரூபாய்க்கு உள்ளாக பெறலாம். application form fill செய்தும் தருகிறார்கள். ஆனால் அவதானமாக செய்து கொள்ளுங்கள். பணம் வசூலித்து ஏமாற்றும் ஆட்களும் உள்ளனர்.
10. Agent மூலம் உள்ளே அனுப்பி passport பெற நினைப்போர்.. அது உங்கள் ஏஜென்ட் பொறுத்தது. இன்று ஏஜென்ட் யாருமே முன்வரவில்லை என்று சொன்னார்கள். Agent சிலர் பணம் பெற்று, வேலை முடித்து தருவதாக இழுத்தடிக்கும் நிலையும் ஏற்பட்டது. Appointment எடுத்தால் மட்டுமே வேலை நடக்கும்.
11. Agent உங்களிடம் இருந்து பணம் கறக்க வேறு வேறு தொகைகளை சொல்வார்கள்..
மேலே சொன்ன கட்டணம் மட்டுமே தேவை. Application form கூட இலவசமாக தான் கிடைக்கிறது. நீங்களே fill செய்து கொள்ளலாம்.
12. Appointment date எடுக்க online வழியே அமையவில்லை என்றால். அதிகாலையில் சென்று இடம் பிடிப்பது மட்டுமே வழி. அதிலும் காத்திருக்க வேண்டும்.
13. தண்ணீர், குடை, கூலிங் கிளாஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு உடன் ஒருவர் இருப்பது நலம். நீண்ட வரிசையில் நீண்ட நேரம் நிற்பது சிரமம் தரும்.
14. உள்ளே வேலை செய்யும் ஊழியர்கள் நிஜமாகவே பாவம். அவர்களை திட்டுவதால், கோபம் கொள்வதால் எந்த பலனும் இல்லை.
15. One day passport இரவில் 11 மணி தாண்டியும் கொடுக்கப்படும் என எடுத்தவர்கள் சொன்னார்கள்.
16. Normal service ஒருமாதம் வரை ஆகலாம்.
ஜூன் 9 இன் படி நிலமை இது.. (நாளை என்ன மாறும் என்பது தெரியாது..)