திங்கள், 2 மே, 2022

ரஷ்யா பற்றிய சில அரிய தகவல்கள்.

Video link 👇
ரஷ்யா! ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் ஐரோப்பிய கண்டத்தில் 40% நிலப்பரப்பு கொண்ட உலகின் பரந்து விரிந்த பெரிய நாடு ரஷ்யா.

கிமு மூன்றாம் நூற்றாண்டில் சிலேவ் எனும் பூர்வகுடி மக்களின் வருகையிலிருந்து தொடங்கிய ரஷ்யாவின் வரலாறு வரலாற்று புத்தகத்தில் அழிக்கமுடியாத பக்கம் ஆகிவிட்டது.
ஆரம்ப காலத்தில் ரூஸ் என்று அறியப்பட்ட ரஷ்யா மங்கோலியர் படையெடுப்பால் பல துண்டுகளாகப் பிளவுற்று ஒரு பகுதி மாஸ்கோ பேரரசாகவும் இன்னொரு பகுதி மங்கோலிய சிற்றரசாகவும் மாறியது.
பின் மாஸ்கோ பேரரசு மங்கோலியர் இடமிருந்து நிலப்பரப்பைக் கைப்பற்றித் பிற நாடுகளை ஆக்கிரமித்து 18ஆம் நூற்றாண்டில் ஒருங்கிணைந்த ரஷ்ய பேரரசாக உருவானது இது வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய பேரரசராக அறியப்படுகிறது இது ஐரோப்பாவின் போலந்து முதல் அமெரிக்காவின் அலாஸ்கா வரை பரந்து விரிந்து இருந்தது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ரஷ்யப் பேரரசு ஆகவும் சோவியத் ஒன்றியம் மூலம் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வாழ்ந்த ரஷ்யா. 1917 இல் ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து உலகின் முதல் சட்ட சோஷலிச நாடாக மாறியது. பின் 1991ம் ஆண்டு 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட மீண்டும் ரஷ்யா குடியரசாக மாறியது.

1. நிலப்பரப்பு அடிப்படையில் ரஷ்யா உலகின் மிகப்பெரிய நாடு நீங்கள் ஒரு சுற்றுலா விரும்பியாக இருந்தால் உங்களுக்கு இது ஒரு சிறந்த இடமாக இருக்கும் ஏனென்றால் இங்கு பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருக்கிறது. ரஷ்யாவின் மொத்த நிலப்பரப்பு 6,601,665 km2 இது உலக நிலப்பரப்பில் 11 சதவீதம்.

2. ரஷ்யாவில் 11 நேர மண்டலங்கள் காணப்படுகிறது. ரஷ்யா பரந்து விரிந்த பெரிய நாடு என்பதால் இங்கே 11 நேர மண்டலங்கள் சாத்தியமாகிறது. இருந்தபோதிலும் உலகில் அதிக நேரமுமில்லை கொண்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரான்சுக்கு உலகம் முழுவதும் பல தன்னாட்சி பிரதேசம் மற்றும் தீர்வுகள் உள்ளதால் இதுவே உலகில் அதிக நேரம் மண்டலங்களை கொண்ட நாடாகவும் எனினும் தனி நாட்டுக்குள்ளே அதிக நேரம் மண்டலம் கொண்ட நாடு என்றால் அது ரஷ்யா தான்.

3. உலகில் உள்ள மரங்களில் 20% ரஷ்யாவில் தான் காணப்படுகிறது. ஒரு கணக்கெடுப்பின்படி 140 பில்லியன் மரங்கள் ரஷ்யாவில் காணப்படுகிறது. இதில் பெரும்பான்மையான காடுகள் சைபீரியாவின் தொலைதூரப் பகுதிகளில் காணப்படுகிறது. கடுமையான குளிர் காரணமாக மக்கள் நடமாட்டம் அற்ற இடமாக இருக்கும் இந்த காடுகள் அழிந்து வரும் சைபீரிய புலிகளின் தாயகமாக காணப்படுகிறது.

4. உலகிலுள்ள குளிரான நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று என்று நமக்கு தெரியும் ஆனால் அது நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு குளிரான நாடு என்று நமக்கு தெரியாது ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள ஒய்மியாக்கோன் நகர்தான் உலகில் மிகக் குளிரான மற்றும் மக்கள் வாழக்கூடிய பகுதியாகும். இங்கு குளிர்காலங்களில் -50°c டிகிரிக்கு கீழ் வெப்பநிலை நிலவுகிறது.

5. ரஷ்ய சனத்தொகையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே ஒப்பீட்டளவில் பெரிய வித்தியாசம் உள்ளது ரஷ்ய சனத்தொகையில் 54%  பெண்களாகவும் 47% ஆண்களாகவும் உள்ளனர். இரண்டாம் உலகப் போரில் 25 மில்லியன் ரஷ்ய வீரர்கள் இறந்ததே மக்கள் தொகையில் இவ்வளவு இடைவெளி காரணமாக உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள ரஷ்ய உக்ரைன் போர் மேலும் இது அதிகப்படுத்தலாம். இருந்து போதும் ரஷ்ய பெண்களை விட ஆண்களே அதிக காலம் உயிர் வாழ்கின்றனர்.

6. அமெரிக்காவின் 49வது மாகாணமான அலாஸ்கா ஒரு காலத்தில் ரஷ்யாவின் பிரதேசம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? 1897ஆம் ஆண்டு போரினால் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஈடுசெய்ய அலாஸ்காவை 7.2 மில்லியன் டாலருக்கு ரஷ்யா அமெரிக்காவிற்கு வித்தது. இந்த பிரதேசம் விக்கப்படும்போது பெரிய அளவில் ரஷ்ய குடியேற்றம் அங்கு இருக்கவில்லை எந்தவிதமான கணிமவளமும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்க இந்த பிரதேசத்தை வேண்டியதன் பின்னர் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டு அது கொடுத்து வாங்கிய பணத்தை விட அதிக லாபம் சம்பாதித்தது.
7. உலகின் மிக நீளமான ரயில்பாதை ரஷ்யாவில் தான் காணப்படுகிறது. மாஸ்கோவில் இருந்து விளாடிவாஸ்டாக் இணைக்கும் இந்த ரயில் பாதை 5,772 மைல் நீளம் கொண்டது. நீங்கள் ரஷ்யாவில் சுற்றிப் பார்க்க நினைத்தால் ட்ரெயின் சைபீரியன் ரயில்வே (Train Siberian railway) தேர்ந்தெடுப்பது சிறந்த தேரவாக இருக்கும்.
8. உலகின் பெருமளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வசிப்பவராக இருந்தால் நீங்கள் பயன்படுத்தும் புதைபடிவ எரிபொருள் 5ல் 3 பங்கு ரஷ்யாவில் இருந்துதான் பெறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 27% இயற்கை எரிவாயுவில் 41% நிலக்கரி இறக்குமதியில் 47% ரஷ்யாவில் இருந்து பெறப்படுகிறது. அந்த வகையில் உலக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
9. உலகின் மிக வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ரஷ்யா சக்திவாய்ந்த ஆயுத தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. அமெரிக்கா சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட ரஷ்யா உலகில் அங்கீகரிக்கப்பட்ட அணுவாயுத நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது.
10. 1947 இல் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பனிப்போர் உச்சம் பெற்றது அந்த காலத்தில் பல துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய ரஷ்யா அதில் விண்வெளி துறையையும் விட்டுவைக்கவில்லை. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் உலகில் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1  ரஷ்யாவினால் தான் ஏவப்பட்டது. அதைத்தொடர்ந்து 1966ஆம் ஆண்டில் உலகின் முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் விண்ணுக்கு சென்று திரும்பினார் இது மனித குல விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய பாய்ச்சல் என்று சொல்லலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...