சனி, 16 ஏப்ரல், 2022

பள்ளிப் பேருந்து கடைபிடிக்க வேண்டிய விதிகள்

பள்ளிப் பேருந்து கடைபிடிக்க வேண்டிய விதிகள்

1. பள்ளி வாகனம் என்று வாகனத்தின் முன் பின் என இருபுறமும் எழுதப்பட வேண்டும் .

2. வாகனத்தின் முன்னும் பின்னும் 20 செ.மீ. விட்டத்திலும் , பக்கவாட்டில் 60 செ.மீ. விட்டத்திலும் பள்ளி வாகனம் என சின்னம் ( Emblem ) வரையப்பட வேண்டும் .

3. வாடகை ஒப்பந்த ஊர்தி என்றால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பணிக்கு என்று குறிப்பிட வேண்டும் .

4. முதலுதவிப்பெட்டியை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.

5. நீளவாக்கில் பள்ளி வாகனத்தில் ஜன்னல்களில் இருப்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும் .

6. தீயணைக்கும் கருவி வாகனத்தில் இருக்க வேண்டும் .

7. வாகனத்தின் பக்கவாட்டு விபரத்தில் பள்ளியின் பெயரும் மற்றும் தொலைபேசி எண்ணும் குறிப்பிட வேண்டும்.

8. வாகனத்தில் கதவுகளுக்கு பாதுகாப்பான தாழ்ப்பாள் இருக்க வேண்டும் .

9. பள்ளி குழந்தை பாடப்புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திட இருக்கையின் கீழ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

10. பள்ளி சார்பாக காப்பாளர் ஒருவர் உடன் பயணிக்க வேண்டும்.

11. பள்ளிக் குழந்தையின் பெற்றோரோ அல்லது பள்ளி ஆசிரியரோ பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதி செய்து குழந்தைகளை பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

12. பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...