புதன், 20 ஏப்ரல், 2022

பூந்தி லட்டு செய்வது எப்படி?

இனிப்புப் பண்டங்களை எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள் .

தேவையானவையான பொருட்கள்:
1.கடலைமாவு- 2 கப்
2.சர்க்கரை - 2
3.கப் நெய் - 3 தேக்கரண்டி
4.ஏலக்காய் தூள் - சிறிதளவு
5.உடைத்த முந்திரி - சிறிதளவு
6.உலர்திராட்சை - சிறிதளவு
7.எண்ணை - தேவையான அளவு

பூந்தி செய்ய செய்முறை : கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பதத்திற்குக் கரைக்கவும் வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும் . மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும் . நெய்யில் முந்திரி , உலர்திராட்சையைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும் . பூந்தியைப் பாகுடன் ஒன்று சேர்க்கவும் கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...