ஆல்வா செய்ய தேவையான பொருட்கள்
கோதுமை மா கால் கிலோ
சர்க்கரை முக்கால் கிலோ
எண்ணெய் அரை கிலோ
நெய் - 100 கிராம் முந்திரிப்
பருப்பு 100 கிராம் ஏலக்காய் 10
கேசரி பவுடர் அரை கரண்டி
கோதுமை அல்வா செய்முறை
முதலில் 10 ஏலைக்காயை மிக்ஸியில் சேர்த்து , அதனுடன் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும் . பிறகு அரை கரண்டி கேசரி பவுடரில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும் .
பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் விட்டர் கண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதனை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும் .
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு , கால் கிலோ கோதுமை மாவை எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து , கட்டி படாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும் கோதுமை மா எண்ணெயில் நன்றாக கரைந்து 5 நிமிடத்திற்கு எண்ணெயிலேயே வேக வேண்டும் .
பிறகு இவற்றுடன் கரைத்து வைத்துள்ள கேசரி பவுடரை சேர்த்து கலந்து விட வேண்டும் . பிறகு கடாயை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைக்க வேண்டும் . பின்னர் கொதிக்க வைத்து எடுத்து வைத்துள்ள தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பிறகு கடாயை மீண்டும் அடுப்பின் மீது வைத்து கைவிடாமல் கலந்து கொஸ்டே இருக்க வேண்டும் . பிறகு முக்கா கிலோ சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கலந்து கொண்டே இருக்க வேண்டும் .
அதன் பின் பொடி செய்து வைத்துள்ள ஏலைக்காய் பவுடரை சேர்த்து கலந்து விடவேண்டும் . இறுதியாக 100 கிராம் நெய் சேர்த்து கைவிடாமல் கலந்து கொண்டு இருக்கும் பொழுது சிறிது நேரத்தில் சேர்த்த எண்ணெய் அனைத்தும் மேலே வர ஆரம்பிக்கும் .
இப்பொழுது சுவையான கோதுமை அல்வா தயாராகிவிட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக