ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் 32 பேருடன் வாய்ஸ் காலில் பேசும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இனி அறிமுகம் இல்லாதவரின் நம்பரை சேமிக்காமலே WhatsAppல் சாட் செய்யலாம்!
இனி WhatsApp சாட்களை விண்டோஸ் ஆப்-பில் அர்சிவ் செய்யலாம்.!
இனி வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை எல்லாருக்கும் ஃபார்வர்ட் செய்ய முடியாது.!
WhatsApp-ல் இனி 2GB சைஸ் கொண்ட ஃபைல்ஸ்களையும் அனுப்பலாம்.!!
யூசர்களுக்கு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இதன்படி, வாட்ஸ் அப் யூசர்கள் இனி குரூப் கால் பேசும்போது 32 பேரை தொடர்பு கொள்ள முடியும். சோஷியல் ஆடியோ லே-அவுட், ஸ்பீக்கர் ஹைலைட், வேவ்ஃபார்ம்ஸ் போன்ற அம்சங்களுடன் புதிய அப்டேட் வருகிறது.
காண்டாக்ட்ஸ் மற்றும் குரூப்களுக்கு புதிய டிசைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி வாய்ஸ் மெசேஜ் பப்புள்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேலரியில் உங்களுக்கு பிடித்தமான மீடியாவை ஆக்சஸ் செய்யும் வசதியும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் 32 பேரை தொடர்பு கொள்ளும் வசதியின் மூலமாக குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், நண்பர்கள், அலுவலகப் பணியாளர்கள் இடையிலான விவாதங்களை விரிவாக மேற்கொள்ள முடியும்.
வீடியோ கால் வசதியில்…
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வாய்ஸ் கால்களை மேம்படுத்த வாட்ஸ் அப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வரும் அதே வேளையில், வீடியோ கால் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தொடக்கத்தில் வீடியோ காலில் 4 யூசர்கள் இணையும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த எண்ணிக்கை 8ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த வரையறை தற்போது வரை மாற்றம் செய்யப்படவில்லை.
ஹெச்டி ஆடியோ குவாலிட்டி இலவசமாக..
வாட்ஸ் அப் வாய்ஸ் காலில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது ஹெச்டி ஆடியோ குவாலிட்டி இலவசமாக வழங்கப்படுகிறது. இதை மேற்கொள்ளும் முன்பாக ஃபோனில் நல்ல தரமான இன்டர்நெட் கனெக்ஷன் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாய்ஸ் கால் ஒன்றை நீங்கள் செய்வதற்கு, தற்போது காண்டாக்ட்ஸ் லிஸ்டில் சென்று, தொடர்புடைய நபரை தேர்வு செய்து கால் ஐகான் கிளிக் செய்ய வேண்டும். ஆனால், நீங்கள் குரூப் கால் தொடங்க விரும்புகிறீர்கள் என்றால், கால் டேப் உள்ள இருக்கும் பிளஸ் சிம்பளை தேர்வு செய்து, காண்டாக்ட்களை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் குரூப் கால் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
2 ஜிபி வரை ஃபைல் ஷேரிங்
பயனாளர்கள் இனி 2ஜிபி வரை ஃபைல் ஷேரிங் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் அண்மையில் தெரிவித்தது. தற்போதைய சூழலில், வாடிக்கையாளர்கள் பகிர்ந்து கொள்ளும் ஃபைல்ஸ் அளவும் 1 ஜிபியை தாண்ட கூடாது என்ற வரம்பு அமலில் இருக்கிறது.
வாட்ஸ் அப்-பில் உள்ள மெசேஜ்களை அட்மின்கள் டெலீட் செய்வதற்கான ஆப்சன் வழங்கப்பட உள்ளது. அவ்வாறு டெலீட் செய்யப்படும் மெசேஜ்கள் பிறருக்கு விசிபிள் ஆகாது. பள்ளி, கல்லூரி, வசிப்பிடம், நண்பர்கள் போன்ற அடையாளப் பெயர்களில் கம்யூனிட்டி தொடங்கும் வசதியையும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக