செவ்வாய், 12 ஏப்ரல், 2022

இலங்கைக்கு ஏன் கையேந்தும் நிலை?

உலகத்திலேயே அனைத்து வளங்களும் நிறைந்த வளமான நாடு இலங்கை ஆனால் எந்த தன்னிறைவான உற்பத்தியையும் மேற்கொள்ளாமல் உணவுக்காகக்கூட அந்நிய நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றது.
அனைத்துவிதமான நிலத்தோற்றங்கள்
அனைத்துவிதமான நீர்நிலைகள்
அனைத்து வகையான மண் வளங்கள்
அனைத்துவிதமான காட்டு வளங்கள்
அனைத்துவிதமான கனிய வளங்கள்
வெயில், மழை, காற்று, குளிர், பனி போன்ற அனைத்து விதமான காலநிலைகளையும் 24 மணிநேரத்தில் அனுபவிக்கக்கூடிய நாடாக அத்தனை வளங்கள் இருந்தும்

அரிசி, (ரின்)மீன், பால்(மா), மரக்கறி, பழங்கள் போன்ற பல உணவுப் பொருட்களையும்,
ஏனைய பெரும்பலான பொருட்களுக்கான மூலப்பொருட்களை கொண்டிருந்தபோதும் மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்து முடிவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்.

இலங்கையின் நிலப்பரப்பளவு தற்போது 65610 சதுர கிலோமீற்றரைவிட சற்று அதிகம்
கிட்டத்தட்ட 532000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய கடல் நீர்வளம்
கிட்டத்தட்ட 261000 ஹெக்டேயர் பரப்பளவுடைய நன்னீர் வளம்
>>> ஆனால் (ரின்)மீன், கருவாடு, மாசியை இறக்குமதி செய்கின்றோம். இதற்காக வருடார்ந்தம் சுமார் 500 மில்லியன் டொலர்களை செலவு செய்கின்றோம்.

இலங்கை மக்களின் வருடார்ந்த அரிசித் தேவை அண்ணளவாக 3.7 மில்லியன் மெற்றிக்தொன். எனினும் அண்ணளவாக 708000 ஹெக்டேயர் நிலத்தில் மாத்திரம் விவசாயத்தினை மேற்கொள்கின்றோம்.
>>> இதனால் அரியையும் இறக்குமதி செய்கின்றோம்
தனிநபர் ஒருவருக்கு ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 104.5 கிலோகிராம் அரிசி தேவை

பண்ணை வளர்ப்புக்குத் தேவையான பெருமளவான புற்தரைகளையும், நீர்நிலைகளையும் கொண்டிருந்தபோதும்
>>> பால்மாவை இறக்குமதி செய்வது மட்டுமல்லாமல் பால்மாவுக்கு (இரசாயன பால்) அடிமையாகியுள்ளோம்.
அண்ணளவாக நாள் ஒன்றுக்கு 200000 கிலோகிராம் பால்மா இலங்கை மக்களுக்கு தேவைப்படுகின்றது

சூரிய வளம், நீர்வளம், காற்றுவளம், கடல் வளங்களை கொண்டிருந்தபோதும்
>>> நிலக்கரியில் இருந்தும், எரிபொருளில் இருந்தும் மின்சாரத்தைப் பெறுகின்றோம்
இதன்மூலம் இன்னுமொரு நாட்டிற்கு வருமானத்தை கொடுத்து வருகின்றோம்.

இயற்கையாகவே பல துறைமுகங்கள் காணப்படுகின்றபோதும்
>>> செயற்கையாக துறைமுகங்கள் அமைக்க செலவு செய்கின்றோம்.

என்ன வளம் இல்லை எங்கள் நாட்டில்?
ஏன் கை ஏந்த வேண்டும் வெளிநாடுகளில்?
குறைந்தபட்சம் உணவுப்பொருட்களிலாவது நாம் தன்னிறைவு அடைய வேண்டும் அதற்கான அதைத்து வளங்களும் மேலதிகமாகவே இருக்கின்றது.

இவை அனைத்துக்கும் ஊழல் நிறைந்த, தகுதி இல்லாத அரசியல்வாதிகளே காரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...