வியாழன், 29 செப்டம்பர், 2022

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்கு முறைப்பாடு செய்யும்   nursery ஆசிரியர்களுக்குமான பதிவு.

மேலுள்ள படத்தை அவதானியுங்கள்.

6 வயது வரை, அவர்களின் சிறிய கைகள் முழுமையாக உருவாகாமல் வளரும் நிலையிலே உள்ளன . குழந்தைகள் விஷயங்களைப் புரிந்துவைத்திருக்கவும், இறுதியில் அவர்களின் எழுதும் திறனை வளர்க்கவும் அவர்களின் கைகளில் முற்போக்கான வளர்ச்சி தேவைப்படுகிறது. மற்ற தசைகளைப் போலவே, நாம் அவைகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், அவற்றைப் பலப்படுத்த வேண்டும், மேலும் வலுவடைய தொடர் பயிற்சி செய்ய வேண்டும்

எனவே இதை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

விளையாட்டு! மணல்மண்ணில் நன்கு விளையாட விடுதல் , வண்ணம் தீட்டுதல், கடதாசிகளை கிழித்தல், மணி அடித்தல்,  பருத்தி பந்துகளை எடுத்தல், சுத்தம் செய்தல், துடைத்தல், பிடித்தல், பிடுங்குதல், வெட்டுதல், நடுதல், தோண்டுதல் போன்றவை.

இந்த வகையான செயல்பாடுகள் உங்களுக்கு கல்வி போல் இல்லாமல் இருப்பதாக உணரலாம் , ஆனால் அவை வரவிருப்பவற்றின் அடித்தளமாகும். நாங்கள் அவர்களை  அவரசரப்படுத்தினால் அதன் முடிவுகள் நீண்டகால பேரழிவையே நமக்குத் தரும். 

குழந்தைகள் எழுதத் தயாராகும்போது, ​​அவர்கள் எழுதுவார்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை, அவர்கள் தயாராக இருக்கும்போது அவர்கள் உங்களுக்குக் எழுதிக்  காண்பிப்பார்கள். உங்களுடைய அவசரத்தினால் அவர்கள் வாழ்க்கையை அழிவுக்குள்ளாக்காதீர்கள்.
https://drive.google.com/uc?export=view&id=1KyQprqJ3i6-uo_7Nme9-f9s80nPzlktz

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...