திங்கள், 15 ஆகஸ்ட், 2022

ஏன் பொறுமையின் உதாரணமாக மூங்கில் செடியைச் சொல்கிறார்கள்.

மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும்.ஆனால் செடி வளரவே வளராது.ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும்.செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி? சடசடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டு காலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம், கடவுள் படைப்பின் மகத்துவம் இது.

முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில்  எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என மூங்கில் முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும்.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல்,நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது.

மூச்சு உள்ளவரை முயற்சி செய்வோம்.முடியாதது என்று இங்கு ஒன்றும் இல்லை!

புதன், 10 ஆகஸ்ட், 2022

மாற்றப்படும் மின் கட்டண விவரங்கள்.

💡நீங்கள் மாதம் 25 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (25*2.50)+30 = 92.50
இனி மின் கட்டணம்  = (25*8) +120 = 320.00

💡நீங்கள் மாதம் 55 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (30*2.50)+(25*4.85) +60 = 256.25
இனி மின் கட்டணம்  =  (30*8)+(25*10)+240 = 730.00

💡நீங்கள் மாதம் 85 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (60*7.85)+(25*10)+90 = 811.00
இனி மின் கட்டணம்  =  (85*16)+360 = 1720.00

💡நீங்கள் மாதம் 115 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (60*7.85)+(30*10)+(25*27.75)+480 = 1944.75
இனி மின் கட்டணம்  =  (90*16)+(25*50)+960 = 3650.00

💡நீங்கள் மாதம் 175 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (60*7.85)+(30*10)+(30*27.75)+(55*32)+480 = 3843.50
இனி மின் கட்டணம்  =  (90*16)+(85*50)+960 = 6650.00

💡நீங்கள் மாதம் 250 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (60*7.85)+(30*10)+(30*27.75)+(60*32)+(70*45)+540 =7213.50
இனி மின் கட்டணம்  =  (90*16)+(90*50)+(70*75)+1500 = 12690.00

💡நீங்கள் மாதம் 400 units மின்சாரம் பாவிப்பவராயின் 
இப்பொழுது மின் கட்டணம் = (60*7.85)+(30*10)+(30*27.75)+(60*32)+(220*45)+540 = 13963.50
இனி மின் கட்டணம்  =  (90*16)+(90*50)+(220*75) +1500 = 23940.00

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

இன்றைய உண்மைகள் .. !! Tamil Aran

இன்றைய உண்மைகள் .. !! 

1.பக்கத்து வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை . ஆனால் பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பிருக்கா .. ? என்ற ஆராய்ச்சி நடக்கிறது . 

2.கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம் , ஆனால் அதில் மணி பார்ப்பதற்குக் கூட நேரம் இருப்பதில்லை . 

3.ஊருக்கு வெளியில் பெரிய பங்களா . அதிலிருப்பதோ இரண்டே பேர் . 

4.பட்டப்படிப்புக்கள் நிறைய .. ஆனால் பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு . 

5. மருத்துவத் துறையில் மாபெரும் வளர்ச்சி .. நோயாளிகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகம் . 

6.கை நிறைய சம்பளம் . இருந்தாலும் வாய் நிறைய சிரிப்பில்லை . மனம் நிறைய நிம்மதியில்லை . 

7.அறிவான , புத்திசாலித்தனமான விவாதங்கள் அதிகம் . உணர்வுப்பூர்வமான உரையாடல்களும் , சின்ன சின்ன பாராட்டுக்களும் குறைவு . 

8. சாராயம் ஊரெங்கும் கிடைக்குது . தண்ணீர் மட்டும் கிடைக்க மாட்டேங்குது .

 9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம் . 

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கின்றனர் . மனிதநேயம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது .

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும் பெற்றோர்களுக்காக.

3 வயதில் பிள்ளையை வீட்டில் வைத்து விளையாட விடாமல் nurseryக்கு அனுப்பும்  பெற்றோர்களுக்கும், குழந்தை  சரியாக எழுதிபழகவில்லை என பெற்றோர்களுக்க...